சிஏஜியை களங்கப்படுத்தும் கபில் சிபல்: முரளி மனோகர் ஜோஷி கண்டனம்
டெல்லி: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஏற்பட்ட நஷ்டம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் விமர்சித்ததற்கு நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விமர்சனம் வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரிக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியின் செய்தியாளர்களிடம் பொது கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், "அமைச்சர் கபில் சிபல் தெரிவித்த கருத்து முறையற்றது. தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடியது. சிஏஜி என்ற உயர்ந்த அமைப்பின் தலைமைக்கு இதுபோன்றதொரு கண்ணியக் குறைவு மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தலைமை கணக்கு, தணிக்கை அதிகாரியின் மதிப்பீட்டில் மாற்றுக் கருத்து இருந்தால், அமைச்சர் பொது கணக்குக் குழுவிடம் தெரிவித்திருக்கலாம். ஆனால் அமைச்சர் வெளிப்படையாக தனது கருத்தை வெளியிட்டது சரியல்ல, முறையற்றது.
இழப்பு எவ்வளவு என்பதை தோரயமாக மூன்று வெவ்வேறு வழிகளில் மதிப்பிட்டுள்ளார் தலைமை கணக்கு, தணிக்கை அதிகாரி. ஆனால், தான் கணக்கிட்டது தான் இறுதியானது என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. இதனை கபில் சிபல் புரிந்து கொள்ளவில்லை," என்றார்.
அமைச்சர் கபில் சிபல் தெரிவித்த கருத்து உரிமை மீறல் குற்றத்துக்குள்ளானதா என்று கேட்டபோது, "இப்போதைய நிலையில் அமைச்சரின் கருத்து உரிமை மீறலா என்று சொல்ல இயலாது. ஆனால் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை குறை கூறுவது மீண்டும் நடைபெறாமல் தடுக்க பொது கணக்குக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார் ஜோஷி.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக பொது கணக்குக் குழு முன் ஆஜராக அமைச்சர் கபில் சிபலை அழைக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கபில் சிபலுக்கு கணக்கு தணிக்கை துறை கண்டனம்:
இதற்கிடையே, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு இழப்பீடுபற்றிய தலைமை கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு குறித்து அமைச்சர் கபில் சிபல் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது முறையற்றது என்று கணக்கு, தணிக்கைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் விசாரணையில் இருக்கும்போது அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது நாடாளுமன்றத்தையே அவமதிப்பதாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications