ஒரு குழந்தை திட்டத்தை எதிர்த்து 2 குழந்தை பெற்றதால் டிஸ்மிஸ் ஆனவர் வழக்கு
பெய்ஜிங்: சீனப் பேராசிரியர் ஒருவரின் மனைவி இரண்டாவது குழந்தை பெற்றதால் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஒரு குழந்தை கொள்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
சீன இளைஞர் பல்கலைக்கழகத்தில் யூனிவர்சிட்டியில் அரசியல் பாடம் எடுக்கும் துணை பேராசிரியாராக இருந்தவர் யாங் ஜிஜு. அவரது மனைவி கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்தார். இந்த தகவல் தெரிய வந்த அதிகாரிகள் அவரை கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிஸ்மிஸ் செய்தனர்.
இதையடுத்து தற்போது யாங் சீன நீதிமன்றத்தில் ஒரு குழந்தை கொள்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் இந்த கொள்கையை முழுவதுமாக நீக்காவிட்டாலும், அதில் சில மாற்றங்களாவது கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகளவில் சீனா மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவதால், சீன அரசு மக்கள் தொகையை குறைக்கும் பொருட்டு ஒரு குழந்தை கொள்கையை கொண்டு வந்தது. அதன்படி ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ள யாங்கிற்கு குடும்ப கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 16 லட்சத்து 34 ஆயிரத்து 908 அபராதம் விதித்துள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications