நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை- ஜான் பாண்டியன் பேட்டி
கோவில்பட்டி: நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது என ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கட்சியின் கொடியை அவர் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாளை (15ம் தேதி) பழனியில் தேவேந்திர குல வேளாளர்களின் 13வது ஆண்டு மண்டகப்படி நடக்கிறது. அதில் சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மதுரையில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கத்துடன் இணைந்து அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படும்.
பொதுக்குழு, செயற்குழு முடிவுக்கு பின் யாருடன் கூட்டணி என்பது அறிவிக்கப்படும். கோவில்பட்டியில் முறைப்படி அனுமதி வாங்கி வீரன் சுந்தரலிங்கம் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்படும். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications