Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக-பாமக கூட்டணி 'டீலா, நோ டீலா?'-சட்டசபையில் விவாதம்

Subscribe to Oneindia Tamil

Balabharathi and G K Mani
சென்னை: திமுக கூட்டணியில் பாமக சேருமா என்பது குறித்து நேற்று சட்டசபையில் படு மும்முரமான விவாதம் நடந்தது. டீலா, நோ டீலா என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்க, டீல் என்று கூறினார் துணை சபாநாயகர்.

சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று நடந்த விவாதம்:

ஜி.கே.மணி: இந்தி எதிர்ப்புக்காக நடந்த போராட்டத்தைப் போல், மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்த வேண்டும். தமிழகத்தில் கல்வி, மது ஒழிப்பு, வேளாண்மை, கலை பண்பாட்டு புரட்சியை ஏற்படுத்த வேண்டும். நதிநீர் பிரச்னையில் நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவோமானால், தமிழகம் பாலைவனமாகி விடும். இப்பிரச்னையை தீர்க்கும் வகையில் காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு நதிகளை, மத்திய அரசு, நாட்டுடமையாக்க வேண்டும். தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும்.

பாலபாரதி (சிபிஎம்): எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போது, இரண்டு, மூன்று அமைச்சர்களாவது குறுக்கிடுவது வழக்கம். கூட்டணி கட்சி என்பதால், ஜி.கே.மணியின் பேச்சில் குறுக்கிடவில்லையா?

துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி: யாரும் குறுக்கிடாத அளவுக்கு அவர் பேசியுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: அவரை பார்த்து பாலபாரதி கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜி.கே.மணி: பேச்சில் உள்நோக்கம் இல்லாமல், வெளிப்படையாக பேச வேண்டும்.

பாலபாரதி: அதெல்லாம் இருக்கட்டும். டீலா... நோ டீலா?

துணை சபாநாயகர்: டீல்.

முன்னதாக ஜி.கே.மணி பேசிய நீளமான அந்தப் பேச்சு

சென்னை மாநகராட்சியை விரிவாக்குவதற்கு பதிலாக தாம்பரம், அம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாநகராட்சிகளை அமைக்க வேண்டும். இதன் மூலம் அதிகாரம் பரவலாக்கப்படும். வேலூர், விழுப்புரம் போன்ற பெரிய மாவட்டங்களையும் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்று சொல்வது போல் பிப்ரவரி 4ல் இடைக்கால பட்ஜெட் வருவதற்கு முன்பாக ஆளுநர் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

பாசன பெருக்கு திட்டம் பல்வேறு இடங்களில் கல்லூரிகள், தோட்டக்கலை பல்கலைக்கழகம், அறிவியல் பெருநகரம் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். இதேபோல் மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்.

பருவமழை அதிகமானதால் மிகப்பெரிய வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் கேட்ட நிவாரண நிதி இன்னும் வரவில்லை. இதனைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ நுழைவுத் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

தற்போது வீட்டுக்கு வீடு விலைவாசி உயர்வு பற்றி பேசுகிறார்கள். விலைவாசியை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் கூட்டியுள்ள கூட்டம் வரவேற்கத்தக்கது.

நாடு தற்போதுள்ள நிலையில் கல்விப்புரட்சி, கலாச்சார புரட்சி, வேளாண் புரட்சி, மது ஒழிப்பு புரட்சி ஆகிய 5 வகை புரட்சிகள் ஏற்பட வேண்டும்.

காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி நீர் மேலாண்மையை மத்திய அரசு அமைக்க வேண்டும். பாலாறு பிரச்சனையில் உறுதி காட்ட வேண்டும். முல்லைப்பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு அடம் பிடிக்கிறது. கேரள அரசின் எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டது. நதிநீர் உரிமையில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. குடிசை இல்லாத தெரு, குடிசை இல்லாத நகரம், குடிசை இல்லாத தமிழகம் பெற இந்த திட்டம் வழிவகுக்கிறது.

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மேட்டூரில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். தென்னகத்தில் இருந்து வரும் பயணிகள் நலனுக்காக ராயபுரத்தில் 3வது பேருந்து முனையம் அமைக்க வேண்டும் என்றார் மணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+