மும்பை தாக்குதல்: பாகிஸ்தானில் விசாரணையே நடக்கவில்லை- உள்துறை செயலாளர் பிள்ளை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் எந்த வித விசாரணையும் நடக்கவில்லை என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,மும்பை தாக்குதல் வழக்கு பாகிஸ்தானில் ஒரு அடி கூட நகர்ந்ததாகத் தெரியவில்லை. குரல் மாதிரிகளை (வாய்ஸ் சாம்பில்ஸ்) அனுப்புமாறு இந்தியா கேட்டுக் கொண்டதற்கு எந்த பதிலும் இல்லை.
கடந்த ஆண்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாகிஸ்தான் சென்றபோது மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், தாக்குதல் நடத்தியவர்களின் குரல் மாதிரிகள் அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பாகிஸ்தான் பிரதமர் ரஹ்மான் மாலிக் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், 7 மாதங்கள் ஆகியும் பாகிஸ்தானிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. இது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications