மும்பையில் ஊழலை எதிர்த்து அத்வானி தலைமையில் பேரணி
மும்பை : ஊழலை எதிர்த்து மும்பையில் இன்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தலைமையில் பேரணி நடக்கிறது.
இது குறித்து பாஜக தலைவர் சோமையா நிருபர்களிடம் கூறியதாவது, பேரணியில் அத்வானி தவிர சுஷ்மா சுவராஜ், பாஜக தலைவர் நித்தின் கட்காரி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், அகாலி தலத்தின் ரத்தன் சிங் அஜ்னலா உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.
இது ஊழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேசிய முற்போக்கு கூட்டணி நடத்தும் 3வது பேரணி ஆகும். இதற்கு முன் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி மற்றும் ஜனவரி மாதம் 9ம் தேதி பேரணிகள் நடத்தப்பட்டன.
இதே போன்று மேலும் 7 பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். கான்பூர் (பிப்ரவரி 5), ரோடக் (பிப்ரவரி 6), ஹைதராபாத் (பிப்ரவரி 9), ஜெய்பூர் (பிப்ரவரி 17) மற்றும் இந்தூர், கயா, சம்பல்பூர் ஆகிய இடங்களில் அடுத்த மாத இறுதியில் பேரணி நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications