மோசமான வானிலையால் சபரிமலையில் தரையிறங்க முடியாத ராகுல்: டெல்லி திரும்பினார்
Subscribe to Oneindia Tamil

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் துணை தலைவர் சுமன் துபேயின் மகனும், ராகுலின் நண்பருமான அமிதாபின் திருமண வரவேற்பு நேற்று கேரளாவில் நடந்தது. அதில் கலந்து கொள்ள ராகுல் கேரளா வந்தார்.
இந் நிலையில் இன்று அதிகாலை அவர் ஆலப்புழாவில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கு ஹெலிகாப்டரை தரையிற்க்க முடியவில்லை.
இது குறித்து கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், வண்டிப் பெரியாரில் பனி மூட்டம் மற்றும் மழையால் ஹெலிகாப்டர் தரையிறங்காமல் திரும்பியது என்றார்.
பின்னர் ராகுல் டெல்லிக்குத் திரும்பினார்.












Click it and Unblock the Notifications