சிபிஎம் அலுவலகத்திற்கு மாவோயிஸ்ட்கள் தீவைப்பு-அடுக்கு மாடி கட்டிடம் குண்டு வைத்து தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil
ஜார்கிராம் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். மேலும், சுய உதவிக் குழு செயல்பட்டு வந்த கட்டிடத்தை கன்னிவெடி வைத்து தகர்த்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜார்கிராம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் திபிபக்சோலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ளது. அதற்கு நேற்றிரவு மாவோயிஸ்ட்கள் தீவைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கேர்போனியில் இரண்டு அடுக்கு கட்டிடத்தில் சுய உதவிக் குழு ஒன்று செயல்பட்டு வந்தது. அந்தக் கட்டிடத்தை ஒரு மாவோயிஸ்ட் கும்பல் கன்னி வெடி வைத்து தரைமட்டமாக்கியது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய மாவோயிஸ்ட்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications