முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்..ஜெயலலிதா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ள சூழ்நிலையில், கண்துடைப்பிற்காக சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு மட்டும் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும்,
அதுவும் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு ஹெக்டேருக்கு ரூ. 10,000 என்பதற்குப் பதிலாக, வெறும் 30 விழுக்காடு நிவாரண உதவியை, அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ. 1,200 மட்டும் அளிக்க இருப்பதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சென்ற ஆண்டு சேதமடைந்த பயிர்களுக்குக் கூட நிவாரண உதவி வழங்கப்படாமல் இருப்பது மற்றுமொரு வேதனை. இது மட்டுமல்லாமல், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகள் உரிய நேரத்தில் விவசாயப் பெருமக்களுக்கு வழங்கப்படாததும், கால்வாய்களை சீரமைக்காததும் அதிக சேதம் ஏற்பட்டதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மூன்று மணி நேரம் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஆய்வு நடத்தியதாகவும், நிவாரணப் பணிகள் குறித்து திருப்தி அடைந்ததாகவும் தமிழக அரசு செய்தி வெளியிட்டு இருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
எனவே, கனமழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காத அரசைக் கண்டித்தும், அரசின் அறிவிப்பிற்கு ஏற்ப உடனடியாக உரிய நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தியும், அதிமுக சார்பில், 19.1.2011 ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications