பாகிஸ்தானில் பெண் ஏட்டைக் குடும்பத்தோடு கொன்ற தாலிபான்கள்
Subscribe to Oneindia Tamil
பெஷாவார்: பெண்கள் பள்ளிகள் பலவற்றைத் தகர்த்த தாலிபான்கள் ஒரு பெண் ஏட்டைக் கொன்றனர். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள அந்த ஏட்டின் வீட்டைத் தாக்கி 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.
பாகிஸ்தானின் கைபர்-பக்துண்க்வா மாகாணத்தில் உள்ளது ஹங்கு மாவட்டம். அங்கு ஏட்டாக இருந்தவர் ஷம்ஷாத் பேகம். அவரது வீட்டிற்கு 12 தாலிபான்கள் ராக்கெட், துப்பாக்கிகளுடன் வந்து ஷம்ஷாத் பேகம், அவரது 2 மகன், 1 மகள் மற்றும் 2 நாற்றனார்களை கொன்றனர்.
பெண் கல்வி மற்றும் வேலை பார்க்கும் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தாலிபான்கள் ஏற்கனவே ஷம்ஷாத்திற்கு பல முறை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், அவரை தனது வேலையை ராஜினாமா செய்யுமாறு கடிதம் கூட அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் அவரைக் கொன்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications