புல்மேடு வழியாக ஐயப்ப பக்தர்கள் செல்ல தடை விதிக்க உயர்நீதிமன்றம் யோசனை
ஜனவரி 14ம் தேதி இரவு வண்டிப்பெரியார் வனப்பகுதிக்குட்பட்ட புல்மேடு பகுதியில், ஏற்பட்ட ஆட்டோ-ஜீப் மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது இந்த சம்பவம்.
இச்சம்பவம் குறித்து கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை கடந்த திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் கோபிநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கேரள காவல்துறை, வனத்துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆகியவற்றை கடுமையாக கண்டித்தது.
மூன்று பேரும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. செயல்பட்டிருந்தால் இது நடந்திருக்காது. மேலும், இந்த கோர்ட் ஏற்கனவே பக்தர்கள் பாதுகாப்புக்காக பரிந்துரைத்த எதையும் இவர்கள் பின்பற்றவில்லை. இதுவும் விபத்துக்கு முக்கிய காரணம். எனவே பக்தர்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எப்படி இந்த விபத்து நடந்தது என்பது குறித்தும் வியாழக்கிழமைக்குள் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இன்று கேரள காவல்துறை மற்றும் தேவஸ்வம் போர்டு சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காவல்துறை சார்பில் டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், பக்தர்களுக்கு சொந்தமான ஆட்டோவும், ஜீப்பும் மோதிக்கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாதது சபரிமலை விபத்துக்கு காரணம்.
விபத்து நிகழ்ந்த புல்மேட்டில் 279 போலீசார் மட்டுமே பணியில் இருந்தனர். விபந்து நடந்த பகுதி வனத்துறைக்கு சொந்தமானது. ஆனால் வனத்துறை சார்பில் பாதுகாப்பு கோரிக்கை விடுக்கப்படவில்லை. அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதும் விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கேரள அரசு மற்றும் தேவஸ்வம் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்கள் பெஞ்சுக்குத் திருப்தியைத் தரவில்லை. இதையடுத்து உங்களால் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க முடியாவிட்டால், அந்தப் பாதையை (புல்மேடு) யாரும் பயன்படுத்தாமல் தடுக்கவாவது செய்யுங்கள் என்று கண்டிப்புடன் கூறினர் நீதிபதிகள்.
புல்மேடு பாதை கிட்டத்தட்ட 27 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது. ஆனால் பாதையின் அகலம் வெறும் 4 மீட்டராக மட்டுமே உள்ளது.இப்படிப்பட்ட பாதையில் பல லட்சம் பேர் சென்றால் எப்படி பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கும் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள அரசால் முடியாவிட்டால், இந்தப் பாதையை பக்தர்கள் பயன்படுத்தாமல் தடுக்கலாம்.
இந்த குறுகலான பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்களை அனுமதித்துள்ளீர்கள். இது ஏன் என்பதை விளக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் ஏராளமான கடைகளும் போடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு யார் அனுமதி கொடுத்தது என்பதை கோர்ட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications