ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை-மு.க. ஸ்டாலின்
கரூர்: ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எந்த தவறும் செய்யவில்லை என தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஆலையில் அதிநவீன மூன்றாவது காகித உற்பத்தி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
இதனையடுத்து ஆலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பின்பு இரவு கரூர் நகர பகுதியில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டுத்திடலில் திமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழகத்தில் தேர்தல் நேரத்தின் போது எத்தனையோ கட்சிகள் வரலாம். பல வாக்குறுதிகளை தரலாம். தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வருவதும், வராமல் போவதும் வேறு விஷயம். ஆனால் அவைகள் தேர்தல் முடிந்த பின்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பின்பற்றுகின்றதா என்றால் அது தான் இல்லை.
ஆனால் தேர்தல் நேரத்தில் திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை 100 க்கு 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் தி்முகவிற்கு செல்வாக்கு கூடியுள்ளது. எனவே, திமுக-வை யாராலும் அசைக்கக் கூட முடியாது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கைத்துறை அதிகாரிகளே அதை ஊழல் என்று கூறவில்லை இழப்பு தான் என்று குறிப்பிட்டுள்ளனர். அதை புரிந்து கொள்ளாமல் எதிர்க் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஊழல் என்று பேசி வருகின்றன.
உதாரணத்திற்கு மத்திய அரசிடம் ரூ. 15. 50க்கு அரிசி வாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி வருகின்றோம். இதனால் அரசுக்கு எத்தனையோ கோடி இழப்பு ஏற்படுகிறது. இதற்கு பெயர் ஊழலா? இது போன்று தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் நடைபெற்றுள்ளது. இன்று நான் உறுதியாக கூறுகின்றேன். ராசா எந்த தவறும் செய்யவில்லை.
எங்கள் ஆட்சியில் ஊழல், ஊழல் என்று சொல்லும் ஜெயலலிதா தான் பெங்களூரில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கி காலம் கடத்தி வருகிறார் என்றார்.
தேர்தல் நிதியாக கரூர் மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடியே 1 லட்ச ரூபாப் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications