ஏர் இந்தியாவை நலிவுற்ற நிறுவனமாக அறிவிக்கக் கூடாது!-பிரபுல் பட்டேல்

வியாழக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
"கேபினெட் அமைச்சராக புதிய பொறுப்பு கொடுத்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஏர் இந்தியாவின் நிதி நிலைமையை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாபகர நிறுவனமாக ஏர் இந்தியாவை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து டெலாய்ட், எஸ்பிஐ கேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தயாரித்த திட்டங்களை நானும் பார்த்திருக்கிறேன். இவற்றை சரியாக நடைமுறைப்படுத்தினால் ஏர் இந்தியா சிறந்த முறையில் செயல்படும்.
ஏர் இந்தியாவை ஸ்திரமான நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது சிக்கலானதுதான் என்றாலும் விமானப் போக்குவரத்து துறையின் புதிய அமைச்சரான வயலார் ரவி உரிய நடவடிக்கை எடுத்து ஏர் இந்தியாவை லாபத்தில் இயங்க வைப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது.
ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டையும் இணைத்தது தவறான யோசனை என்கிற குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. கூட்டாக ஆலோசித்து எடுக்கப்பட்ட அரசின் முடிவு இது.
பொதுத்துறை நிறுவனங்களை திறம்பட செயல்பட வைப்பதே எனது முன்னுரிமைப் பணியாக இருக்கும்," என்றார்.












Click it and Unblock the Notifications