எடியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி... பாஜக கடும் அதிர்ச்சி!

ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிரஜின்பாஷா மற்றும் கே.என்.பால்ராஜ் ஆகியோர் கடந்த 2010 டிசம்பர் 28-ம் தேதி ஆளுநர் பரத்வாஜை சந்தித்து, முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி அளிக்குமாறு மனு அளித்திருந்தனர்.
இதற்கு ஆதாரமாக ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் புகார் மனுவுடன் இணைத்திருந்தனர்.
முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவது பற்றி ஆளுநர் பரிசீலித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கையை கைவிடுமாறு கோரி கடந்த 19-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு கடிதம் மூலம் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆளுநரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஊழல் தடுப்பு சட்டம், 1988 பிரிவு 19 (1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 பிரிவு 197ன் கீழ் முதல்வர், உள்துறை அமைச்சர் மீதான ஊழல் புகார் தொடர்பாக உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இரு வழக்கறிஞர்களுக்கும் அனுமதி அளித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் மீது வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான நடவடிக்கையை கைவிடுமாறு கோரும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தார்.
முதல்வர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications