இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது-ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படைக் கும்பலின் அட்டூழியம் நின்றபாடில்லை. நாகை மாவட்ட மீனவர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீளுவதற்குள், ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து விரட்டியுள்ளனர் இலங்கை கடற்படையினர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து சுற்றி வந்தனர்.

இதனை கண்ட மீனவர்கள் செய்வதறியாது திகைத்து நின்ற போது இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலால் மீனவர்கள் படகினை இடித்துத்
தள்ளினர். இதில் சில படகுகள் நிலைகுலைந்து தள்ளாடின.

பின்னர் வலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஓடும்படி மிரட்டியுள்ளனர் இலங்கை கடற்படையினர். இதையடுத்து மீனவர்கள் அவசரம் அவசரமாக கிளம்பியபோது, மீண்டும் ரோந்துக் கப்பலால் இடித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் வேகமாக கிளம்பி கரைக்கு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து மீன்வளத்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தட்டிக் கேட்க ஆள் இல்லாத நிலைக்கு இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலுக்கே வரக்கூடாது என்ற ரீதியில் அவர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர். இதற்கு உறுதியான முடிவு கட்டப்படாவிட்டால் தங்களது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி விடும் என மீனவர்கள் குமுறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+