அமெரிக்க பல்கலைக்கழகம் மூடல்: நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிலிகான் வேலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டவர்களுக்கு குடியேற்றம் வாங்கிக் கொடுத்ததால் மூடப்பட்டது. இதனால் அங்கு படித்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

அவர்களில் பெரும்பாலனவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் உள்ளது.

சான் பிரான்சிஸ்கோ பே பகுதியில் உள்ளது டிரை-வேலி பல்கலைக்கழகம். இது விசா பெர்மிட்கள் துஷ்பிரயோகம், பண ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்துள்ளது.

இது குறித்து கலிபோரினியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

இந்த பல்கலைக்கழகத்தில் ரெய்டு நடத்தப்பட்டு கடந்த வாரம் மூடப்பட்டது. இது சட்டத்திறகு புறம்பாக வெளிநாட்டவர்களுக்கு குடியேற்றம் வாங்க உதவியுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து 555 மாணவர்கள் படித்தனர். இதில் 95 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+