ஆஸ்திரேலியாவில் மழை... இந்தியாவில் உயருது ஃப்ரிட்ஜ் விலை!!
டெல்லி: ஆஸ்திரேலியாவில் கடும் மழை காரணமாக இந்தியாவில் பிரிட்ஜ், ஏ.சி போன்ற சாதனங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மழைக்கும் இந்திய பிரிட்ஜுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா... இந்த சாதனைங்களைத் தயாரிக்கத் தேவையான முக்கிய மூலப் பொருள ஆஸ்திரேலியாதான் சப்ளை செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத வெள்ளச் சேதம் ஏற்பட்டது. இதனால் அங்கு தொழில் உற்பத்தி முடங்கியது. இதனால் பிரிட்ஜ், ஏ.சி. போன்றவை தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருட்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பிரிட்ஜ், ஏ.சி. போன்றவற்றின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மூன்று முறை இந்தியாவில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் நிலக்கரி, இரும்பு போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் நிலக்கரி விலை 56 சதவீதமும் , இரும்பு விலை 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு விலையும் 25 சதவீதம் வரை அதிகரிக்கூடும் என்பதால், இந்தியாவிலும் இவற்றின் விலை உயருகிறது.


Click it and Unblock the Notifications
