கூடுதல் கலெக்டர் எரித்துக்கொலைக்கு கண்டனம்-80 ஆயிரம் அதிகாரிகள் ஸ்டிரைக்
மும்பை: மஹாராஷ்டிராவில் கூடுதல் மாவட்ட கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 80 ஆயிரம் அரசு அதிகாரிகள் இன்று வேலையை புறக்கணித்தனர்.
இது குறித்து மாநில கெசடட் அதிகாரிகள் சங்கத் தலைவர் ரவீந்திர தோங்கடே கூறியதாவது,
நாங்கள் இந்த போராட்டத்தை வேலை நிறுத்தம் என்று அறிவிக்கவில்லை. ஒரு கலெக்டரை கொடூரமாகக் கொன்ற சம்பவத்தால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். நாங்கள் எங்கள் வேலையை செய்யாமல் புறக்கணிக்கிறோம்.
எங்கள் சக ஊழியர்களை வேலையை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த கொடூரக் கொலையை எதிர்த்து நாங்கள் பேரணிகள் நடத்தவிருக்கிறோம். நாங்கள் மாவட்ட கலெக்டரையும், வட்டாரக் கமிஷனரையும் சந்தித்து இந்த சம்பவம் குறித்து கடிதம் கொடுக்கவிருக்கிறோம். மந்திராலயாவில் அரசு ஊழியர்கள் கண்டனக் கூட்டம் நடத்தவிருக்கிறோம் என்றார்.
இதற்கிடையே சோனாவானே கொலையைக் கண்டித்து இன்று நாசிக் மாவட்டத்தில் சிவ சேனா பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications