தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர்
டெல்லி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இதனால் வாக்கு வங்கிகளை தக்க வைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
சமீபத்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளையர்களுக்கு எதிராக தீவிரமாக போராடியவர் வ.உ.சி. என அன்புடன் அழைக்கப்பட்ட சிதம்பரனார். தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று கப்பல் வாங்கி சுதேசிக் கப்பலை இயக்கி சாதனை படைத்தவர். வெள்ளையர் அரசால் இரட்டை ஜென்ம தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டு விடுதலைக்காக அனைத்து சொத்துக்களையும் விற்று போராடி மறைந்தவர் வ.உ.சி.
இவரது பெயரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இத்தனை காலமாக அமைதியாக இருந்து வந்த மத்திய அரசு தற்போது அவரது பெயரை சூட்டுவதாக அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications