கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மார்ச்சில் உற்பத்தி துவக்கம்: இயக்குநர் காசிநாத் பாலாஜி
நெல்லை: கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் வரும் மார்ச் மாத இறுதியில் மின்சார உற்பத்தி துவங்கும் என அணுமின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்திய-ரஷ்ய கூ்ட்டு முயற்சியுடன் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து வளாக இயக்குனர் பாலாஜி கூறுகையில்,
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் முதல் உலை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அணு உலையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உயர் காற்றழுத்த சோதனை கடந்த 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நள்ளிரவு வரை நடந்தது.
இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் முன்னிலையில் வளி மண்டல காற்றை விட 4.6 மடங்கு அதிகமான உயர் அழுத்த காற்று அணு உலையில் செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக அனைத்து புள்ளி விபரங்களும் திரட்டப்பட்டன. இந்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது. இதன் மூலம் கூடன்குளம் அணு மின் நிலையத்தில் 40 ஆண்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் இறுதியில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications