திருமாவளவனுக்கு திருச்செந்தூரில் எதிர்ப்பு !
திருச்செந்தூர்: திருமாவளவன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூர் பகுதி முழுக்க கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இலங்கைத் தமிழர் பிரச்னையின்போது தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தால். திருமாவளவன் திருச்செந்தூருக்கு வருகை தந்தார்.
இதற்காக திருச்செந்தூர் பகுதி முழுக்க அவரை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டது.
இவற்றால், பொதுமக்களுக்கும் தங்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி, கடை வியாபாரிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் கிழிந்து எறிந்தனர்.
இதனையடுத்து, வியாபாரிகள் மீது போலீசார் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது. இதனால் அந்த பகுதியில் சென்ற பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த நிலையில், போலீசாரின் தடியடிக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், திருச்செந்தூருக்கு வருகை தரும் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்செந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வர்த்தகர்கள் சங்கங்களின் சார்பில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.
இதனால் திருச்செந்தூர் பகுதி முழுக்க கடும் பதட்டமாக காணப்படுகின்றது. இதனால் அங்கு போலீசார் பெறுமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications