அரபிக் கடலில் பிடிபட்ட சோமாலி கொள்ளையர்களிடம் இன்று மும்பையில் விசாரணை
டெல்லி: லட்ச தீவுகள் அருகில் இந்திய கடற்படைக்கும் சோமாலி கடற்கொள்ளயர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இறுதியில் இந்திய கடற்படை அவர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்டுள்ள 15 சோமாலி கடற்கொள்ளையர்களிடம் இன்று மும்பையில் விசாரணை நடத்தப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள 15 கடற்கொள்ளையர்களும் இன்று மும்பை கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் பிவிஎஸ் சதீஷ் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை 15 சோமாலி கடற்கொள்ளையர்களும் தாய்லாந்து நாட்டு பதிவு எண் கொண்ட பிரான்தலே என்னும் படகில் அரபிக் கடலில் பயணம் செய்தனர். அந்த படகை அவர்கள் சிறிது காலம் முன்பு கடத்தியுள்ளனர்.
அந்தப் படகு அரபிக் கடலுக்குள் நுழைந்தவுடன் ரோந்து பணியில் இருந்த கடற்படையினர் அதிவேகமாகச் செல்லும் ஐஎன்எஸ் கான்ஸ்கரோவில் துரத்த ஆரம்பித்தனர். கடற்படை கப்பலின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்கமுடியாமல் அவர்கள் தண்ணீரில் குதித்தனர்.
பின்னர் அவர்களை கடற்படையினர் கைது செய்தனர். இன்று நடத்தப்படும் விசாரணையில் அவர்கள் கொள்ளையிடிக்கும் முறை பற்றி கடற்படை, காவல் துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விசாரிக்கவிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications