விசாரணைக்கு பயந்து போலீஸ் ஏட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
நாகர்கோவில்: கருங்கல் அருகே போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விசாரணைக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கருங்கல் அருகே உள்ள பாலபள்ளம் நடுப்பிடாகத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. அவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணபிள்ளை வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை செய்து கொண்ட ஏட்டு கிருஷ்ணபிள்ளைக்கு கஸ்தூரி பாய் என்ற மனைவியும், அரிகரன், ராமகிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் அரிகரன் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
போலீஸ் ஏட்டு கிருஷ்ணபிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏட்டு கிருஷ்ணபிள்ளை தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் போலீசார் மீது சமீப காலமாக பல்வேறு புகார்கள் மேலதிகாரிகளுக்கு வந்தன.
இதனையடுத்து புகாரில் சிக்கிய போலீசாரை அழைத்து உரிய விசாரணை நடத்த மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கிருஷ்ணபிள்ளை உள்பட 5 போலீஸ்காரர்களை விசாரணைக்கு அழைத்து இருந்தனர். இதில் 4 பேர் மட்டுமே வந்து இருந்தனர். கிருஷ்ணபிள்ளை வரவில்லை.
இந்நிலையில் கிருஷ்ணபிள்ளை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணைக்கு பயந்துதான் அவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications