முதல்வர்கள் மாநாட்டில் ப.சிதம்பரத்துடன் நரேந்திரமோடி மோதல்: சரமாரி புகார்
டெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர்கள் மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். அவருக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
டெல்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது,
நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், சமூக விரோதிகளை ஒடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கட்டளையிடுகிறது. ஆனால் தீவிரவாதிகளிடம் உள்ள ஆயுதங்களுக்கு இணையானவற்றை மாநில போலீசாரால் வாங்க முடியவில்லை.
ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் காஷ்மீர், ஆந்திரா, ஒரிசா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு குறிப்பிட்ட வகை ஆயுதங்கள் வழங்க மறுக்கின்றன. இதற்கு மத்திய அரசும் ஒழுங்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது,
இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து தான் இருக்கிறோம். அதே நேரத்தில் துருக்கி, ரஷ்யா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து அதே தரமான ஆயுதங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கடிதமும் எழுதி இருக்கிறோம் என்றார்.
அப்போது மோடி குறுக்கிட்டு,
மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தி விட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் மாவோஸ்டுகளின் ஆதிக்கமும், தாக்குதல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அவர்களால் ஏராளமான போலீசாரும், மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர் என்றார்.
அதற்கு சிதம்பரம் பதிலளிக்கையில்,
மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் அவர்கள் ஒடுக்கப்பட்டு தான் வருகிறார்களே தவிர முன்னேறவில்லை என்றார்.
உடனே மோடி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். அதற்கு சிதம்பரம் இது உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாடு அதனால் கறுப்புப் பணத்தை பற்றி தற்போது பேச வேண்டாம் என்று கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications