தொகுதிப் பங்கீடு பேச்சு-திமுக குழுவில் ஸ்டாலின், பாலு, ஆற்காடு, துரைமுருகன், பொன்முடி

சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதி பேச்சு நடத்தினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் 80 இடங்கள் கோரப்பட்டது. இல்லாவிட்டால் 60 இடங்களும் ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று காங்கிரஸ் நிபந்தனை போட்டார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
இதை திமுக தரப்பு ஏற்க மறுத்தது. காங்கிரசுக்கு 50 இடங்கள் தரவே தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. ஆனாலும் காங்கிரஸ் பிடிவாதம் 70 இடங்கள் வரை தருவதாகவும், அதே நேரத்தில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச இரு கட்சிகளும் குழு அமைத்துப் பேச்சு நடத்தலாம் என இரு தரப்பும் முடிவு செய்தன.
இந் நிலையில்
துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி மற்றும் திமுக நாடாளுமன்ற எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கொண்ட குழுவை முதல்வர் கருணாநிதி இன்று அமைத்துள்ளார்.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகள் குறித்து கலந்து பேசிட பின்வருவரை கொண்ட குழு ஒன்று தலைமைக் கழகத்தின் சார்பில் அமைக்கப்படுகிறது.
அந்தக் குழுவில் இடம்பெறுவோர் வருமாறு: இந்த குழுவில் துணை முதலமைச்சரும், பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு உறுபபினர் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று அன்பழகன் அறிவித்துள்ளார்.
இந்தக் குழு காங்கிரஸ் உள்பட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடனும் கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தும். இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications