அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்-நடிகர் கார்த்திக்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அன்மையில் நான் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்து பேசினேன். அப்போது வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என்பது முடிவானது.
ஜெயலலிதா ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். சிவகாசிக்கு சென்றபோது நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மக்கள் விரும்பினால் நான் போட்டியிடத் தயார்.
கடந்த 2008-ம் ஆண்டு தான் நாடாளும் மக்கள் கட்சியைத் துவங்கினேன். கடந்த 2 1/2 ஆண்டுகளில் எங்கள் கட்சி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த தேர்தலின்போது நாங்கள் சார்ந்திருந்த கட்சியினர் சிலரே குளறுபடி செய்தனர். அவர்கள் தற்போது எங்களுடன் இல்லை.
கட்சிக்கு உழைக்கும் உணமையானவர்கள் இருக்கிறார்கள். தேர்தல் பணி மேற்கொள்வதற்கென தனியாக 15 நபர் குழு அமைக்கப்படுகிறது. மக்கள் மத்திய, மாநில அரசுகள் மீது கோபத்தில் உள்ளனர். ஊழல் மலிந்துள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை கொண்டு வர முடியவில்லை. எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications