பெரம்பலூரில் ராசாவுக்கு ஆதரவாக சாலை மறியல்-பஸ்கள் மீது தாக்குதல்-கடையடைப்பு
பெரம்பலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் பெரம்பலூர் மற்றும் அரியலூரில் போராட்டத்தில் குதித்தனர். இதில் பஸ்கள் தாக்கப்பட்டன, கடைகள் அடைக்கப்பட்டன. அதிமுகவினருடனும் அவர்கள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் துரைசாமி, துணை செயலாளர் ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளரும் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர் மற்றும் நூற்றுக்கணக்கான தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் பெரம்பலூர் நான்கு ரோடு, மேம்பாலம் அருகில் சாலையின் நடுவே டயரை தீவைத்துக் கொளுத்தினர்.
திருச்சி-சென்னை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் இருபுறமும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து நின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது திடீரென அரசு பஸ்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. அப்போது 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. ராசாவின் அலுவலகம் அருகே ஒரு பஸ்சும், நான்குரோடு பாலம் அருகே மற்றொரு பஸ்சும், வேப்பந்தட்டை அருகே ஒரு பஸ்சும் மறித்து நிறுத்தப்பட்டு கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு டேங்கர் லாரியின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
கடைகளை அடைக்கக் கோரி ஒரு கோஷ்டியினர் கூறவே பயந்து போன வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர். பெரம்பலூர் முழுவதும் இதனால் பதட்டம் ஏற்பட்டது. மாணவ, மாணவியர் பஸ்கள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வீடுகளுக்குத் திரும்புவதில் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
அரியலூரில் திமுக, அதிமுகவினர் மோதல்:
இதற்கிடையே அரியலூர் பஸ் நிலையப் பகுதியில், எம்ஜிஆர் சிலை அருகே அதிமுகவினர் பட்டாசு கொளுத்தி ராசா கைதை கொண்டாடினர். இதையடுத்து அங்கு திமுகவினர் விரைந்து வந்தனர். மாவட்ட கவுன்சிலர் அறிவழகன் தலைமையில் வந்த அவர்கள் ராசாவை வாழ்த்தியும், ஜெயலலிதா ஒழிக என்று கூறியும் கோஷமிட்டு பதில் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதகு. கட்டைகளை எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்க முயலவே போலீஸார் குறுக்கிட்டு இரு தரப்பையும் பிரித்து அமைதிப்படுத்தி கலைத்தனர்.
அந்த சமயத்தில் அதிமுகவினர் வைத்த வெடியில் சிக்கி திமுக கொடியில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவினரைக் கைது செய்யக் கோரி திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்கள் காயம்:
செந்துறை மெயின்ரோட்டில் உள்ள திமுக அலுவலகம் மற்றும் அண்ணாசிலைக்கு எதிரே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். அப்போது அங்கு தனியார் மேல்நிலைப்பள்ளி பஸ் ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் அதை மறித்து நிறுத்துவதற்காக திமுகவினர் திபுதிபுவென ஓடியதால் பஸ் டிரைவர் சுப்பிரமணியம் வேறு பாதையில் செல்வதற்காக பஸ்சை வேகமாக ஓட்டினார்.
இதில் பஸ் தாறுமாறாக ஓடி வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாமக நிர்வாகி ஒருவரின் மகன் தீன தயாளன் (8), சுபாஷ் ஆகிய இரு மாணவர்கள் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக இரு மாணவர்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
திமுகவினரின் இந்தப் போராட்டங்களால் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும் பதட்டம் காணப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications