கச்சத்தீவு-தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட புதிய ஒப்பந்தம்: திமுக கோரிக்கை

இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், மீன்பிடி வலைகள் சிதைக்கப்பட்டும், தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதுமான நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் இலங்கை கடற்படையினரால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலுக்கு இலங்கை கடற்படையினர் காரணம் அல்ல என்று வாதிடும் இலங்கை அரசுக்கு திமுக பொதுக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகளால், வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லியில் முதல்வர் கருணாநிதி சந்தித்தப்போது, அவ்வப்போது சுமூக முடிவுகள் மேற்கொள்வதற்காக இருதரப்பையும் சேர்ந்த கூட்டுக்குழு நியமிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் நலனையும், பாதுகாப்பையும் நிரந்தரமாக தொடரச் செய்யும் வகையில், கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்று இலங்கையுடன் போடப்பட வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத்திடும் என்பதால், அரசியல் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநிலகத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் வலுப்பெறும் வகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி மகளிருக்கான இட ஒதுக்கீடு கனவை நனவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications