தெலுங்குதேச தலைவர் நாமா நாகேஸ்வர ராவ் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கு தேசக் கட்சி எம்பி நாமா நாகேஸ்வர ராவின் அலுவலகத்திலும், வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
கம்மம் டவுனில் உள்ள நாகேஸ்வர ராவின் கட்டுமான நிறுவனமான மதுகானிலும், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
இன்று காலை முதல் நடந்த சோதனை வழக்கமானது தான் என்றும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்று நிறுவனக் கணக்கு சரிபார்க்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
நாகேஸ்வர ராவ் கம்மம் தொகுதி எம்.பி. ஆக இருக்கிறார். அவரது மதுகான் நிறுவனம் ஆந்திரா தவிர பிற மாநிலங்களிலும் சாலை போடுவது உள்ளிட்ட பல முக்கிய பணிகளை செய்து வருகிறது. மேலும், இது வெளிநாடுகளிலும் புராஜெக்ட்கள் செய்து கொடுக்கிறது. இந்த சோதனை நடந்தபோது அவர் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications