அரசு அலுவலகத்தில் மது அருந்திய அலுவலர்கள் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணியின் போது மது அருந்தி பணியாற்றிய மூன்று அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது கீழ்பென்னாத்தூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம். இந்த அலுவலகத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணியில் இருந்த எழுத்தர் குமார், அலுவலக உதவியாளர் ஜெயகுரு சாந்தன், பதிவு எழுத்தர் அருணாச்சலம் ஆகிய மூன்று பேரும் மது மயக்கத்தில் தள்ளாடியபடி பணி செய்து கொண்டு இருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோபிதாஸ், அவர்கள் மூன்று பேர்களை பணி மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
அதன்படி எழுத்தர் குமார் அனக்காவூருக்கும், அலுவலக உதவியாளர் ஜெயகுருசாந்தன் ஆரணிக்கும், பதிவு எழுத்தர் அருணாச்சலம் போளூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், உயர் அதிகாரி உத்தரவை செயல்படுத்த மறுத்த அவர்கள் மூன்று பேரையும், மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் கோபிதாஸ் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications