பாமக தனித்து போட்டியிடாது-டாக்டர் ராமதாஸ் உறுதி
வேலூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடாது. கண்டிப்பாக கூட்டணி சேர்ந்தே போட்டியிடும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி கிளை தலைவர் மற்றும் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,
இன்றைய இளைஞர்களில் பலர் சினிமா மோகத்தாலும், மது, சிகரெட் போன்ற போதை பொருட்களாலும் அழிவுப் பாதையில் செல்கிறார்கள். இவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு 12 ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வியும், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்கள் அனைவருக்கும் ஆராய்ச்சி படிப்பு போன்ற அனைத்து உயர்கல்வியும் இலவசமாக வழங்க வேண்டும்.
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை அரசு வழங்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 60 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்துள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடாது. ஆனால், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் தேர்தலில் போட்டியிடும். அந்த கூட்டணி எந்த கூட்டணி என்பதை விரைவில் முடிவு செய்யப்படும்.
அது மட்டும் அல்ல அது எந்த கட்சியுடன் கூட்டணியாக இருந்தாலும் சரி, பர்கூர் தொகுதியை பா.ம.க -விற்கு கேட்டு வாங்குவோம். எனவே விரைவில் பர்கூர் தொகுதியில் தொகுதி மாநாடு நடத்த உள்ளோம் என்றார் அவர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications