தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு 'புளியை' கரைக்கிறது-அதிமுக
சென்னை: வரும் தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு 'புளியை' கரைக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் சட்டசபையில் கூறினார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அதன் விவரம்:
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): இந்த பட்ஜெட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. விலைவாசி உயர்வை சுட்டிக் காட்டினால் அமைச்சர் புள்ளி விவரத்தை கூறுகிறார். இது எங்களுக்கு புரியவில்லை.
உணவுத்துறை அமைச்சர் வேலு: அதிமுக ஆட்சியில் ஜனவரி மாதம் ஒரு கிலோ புளி ரூ.22க்கு விற்றது. அவர்களது ஆட்சியில் அதே அக்டோபர் மாதத்தில் ஒரு கிலோ புளி ரூ.45க்கு விற்கப்பட்டுள்ளது. எனவே விலை ஏற்றம், இறக்கம் அவ்வப்போது நடைபெறுவதுதான். இன்று காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.
செங்கோட்டையன் (அதிமுக): புளி விலையை அமைச்சர் எடுத்து சொன்னார். வருகிற தேர்தலை எண்ணி திமுகவுக்கு 'புளியை' கரைக்கிறது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி: அத்தியாவசிய பொருள் விலை மட்டும் உயரவில்லை. சிமெண்ட், மணல், கம்பி விலையும் உயர்ந்து விட்டது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் இப்போது அமளிக்காடாக காட்சி அளிக்கிறது. தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் நடக்கிறது. காவல்துறை செயல்படுகிறதா? என்றே சந்தேகம் எழுகிறது. பொதுமக்களுக்கு ஆபத்து என்றால் காவல்துறையில் முறையிடலாம். ஆனால் காவல்துறைக்கே ஆபத்து என்றால் யாரிடம் முறையிடுவது?
(தொடர்நது முதல்வர் குறித்து அவர் சில வார்த்தைகளைக் கூற, அதற்கு அமைச்சர் பொன்முடி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன)
முல்லை வேந்தன் (திமுக): அதிமுக ஆட்சியில் டெஸ்மா, எஸ்மா சட்டம் கொண்டு வந்ததோடு பணி நியமனத் தடை சட்டமும் வந்தன. இதனால் பலர் வேலையின்றி தவித்தனர். இப்போது திமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கியவர் முதல்வர் கருணாநிதி.
செங்கோட்டையன் (அதிமுக): திருப்பூர், கரூர், கோவையில் மின்வெட்டால் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
பொன்முடி: இது எங்கள் தவறல்ல. நீதிமன்றத் தீர்ப்பால் நடந்துள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டில் கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைதான் உள்ளது. அனைவரின் வருமானமும் உயர்ந்துள்ளது.
முல்லை வேந்தன் (திமுக): அதிமுக ஆட்சியில் நடந்ததை மனதில் வைத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி விட்டு கடைசியில் திமுக ஆட்சியில் நடந்ததுபோல் சொல்கிறார். சட்டம் - ஒழுங்கு பற்றி பேசினார். சுப்பிரமணிய சாமிக்கு கோர்ட்டில் நீங்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என்பது நாட்டுக்கு தெரியும். ரூ.100 கோடி செலவில் நடந்த திருமணமும் நாட்டுக்கு தெரியும். கும்பகோணம் மகாமகம், 3 கல்லூரி மாணவிகள் எரிப்பு... இப்படி எத்தனையோ கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இனி கோட்டைக்குள் நுழையப் போவதில்லை.
செங்கோட்டையன்: சுப்பிரமணிய சாமிக்கு கறுப்பு கொடி காட்டியதை கூறினார். பிரதமர் இந்திராகாந்திக்கு நீங்கள் கறுப்பு கொடி காட்டியபோது நடந்ததை நாடே அறியும்.
அமைச்சர் துரைமுருகன்: நாங்கள் கறுப்பு கொடி காட்டியது அரசியலுக்காக. ஆனால் நீங்கள் சுப்பிரமணிய சாமியை அவமானப்படுத்தினீர்கள். இதுதான் வித்தியாசம்.
இதைத் தொடர்ந்து முல்லைவேந்தன் பேசிய வார்த்தைகளுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர், அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரினர். இதையடுத்து திமுக-அதிமுக எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து முல்லைவேந்தன் பேசிய சில வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
இதையடுத்து அவையில் அமைதி திரும்பியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications