சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: பொதுச் செயலாளர் மானே
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதென்று பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் மானே தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடக்கவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி அமைப்பதில் முனைப்பாக இருக்கிறது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இது குறித்து சுரேஷ் மானே தெரிவித்ததாவது,
நாங்கள் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். இதனால் மொத்தம் 10 சதவீதம் ஓட்டுக்கள் வரை பிரிக்கப்படும். இருந்தபோதிலும் தமிழகத்தில் எங்கள் நிலைபாட்டை நிரூபிக்கும் வகையில் தான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications