சர்வதேச ஆட்டோமொபைல் மையமாக மாறிவரும் சென்னை-ஸ்டாலின்
சென்னை: "உலக அளவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையம் என்ற அந்தஸ்தை சென்னை விரைவில் பெறும்,"என துணை முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரூ.2,100 கோடி முதலீட்டில் சென்னைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அப்போலோ நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.விழாவில் பேசிய அவர் கூறியதாவது:
"உலகின் ஆட்டோமொபைல் தலைநகரமாக சென்னை மாறி வருகிறது.தமிழகத்தி்ல் தொழிற்சாலை அமைப்பதற்கு சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் தற்போது ஆண்டுக்கு 2.2லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த உற்பத்தி வரும் ஆண்டுகளில் பன்மடங்கு உயரும்.செய்யூர் அருகே ரூ.1,800 கோடி செலவில் மஹிந்திரா நிறுவனம் எஸ்.யூ.வீ கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.இந்த தொழிற்சாலையிலிருந்து ஆண்டுக்கு 1.5லட்சம் கார்கள் உற்பத்தி செய்யலாம்.
இதேபோன்று,இந்தோனேஷியாவை சேர்ந்த டேக்ஸ்மோ நிறுவனத்தின் ஓர் அங்கமான சுந்தரேஸ்வர் அலாய் நிறுவனம் கங்கைகொண்டானில் ரூ.1,000கோடி முதலீட்டில் டிராக்டர் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.இதைத்தொடர்ந்து,பல்வேறு நிறுவனங்கள் தமிழக்கத்தில் தொழிற்சாலை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
விரைவில் தமிழக ஆட்டோமொபைல் துறையில் ரூ4,000கோடி முதலீடு கிடைக்கும்.அனைத்து தொழிற்சாலைகளும் உற்பத்தியை துவங்கும்போது,சர்வதேச ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக சென்னை மாறும்.
இதுதவிர,அப்போலோ டயர்ஸ்,ஜே.கே.டயர்,மிச்செலின் மற்றும் எம்.ஆர்.எப்.,நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1,600 மெட்ரிக் டன் டயர் தயாரிக்கப்படுகிறது.
டெய்ம்லர்,ரினால்ட்-நிசான்,விஸ்டியோன்,மஹிந்திரா மற்றும் அசோக் லேலண்டு நிறுவனங்கள் சென்னையில் உள்ள தங்களது ஆட்டோமொபைல் துறை ஆராய்ச்சி மையங்களை மேம்படுத்தி வருகின்றன.
இதுதவிர,ரூ.500கோடி செலவில் சென்னையில் தேசிய ஆட்டோமொபைல் சோதனை ஓட்ட மையம் (நேட்ரிப்)அமைக்கப்பட்டு வருகிறது.இது வரும் செப்டம்பர் மாதம் செயல்பட துவங்கும். ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தமிழகத்தில் இருக்கும்,"என்று கூறினார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications