சென்னை நாகர்கோவில்-கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 30ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை சென்று அடையும். மறுமார்க்கத்தில் 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாகர்கோவிலில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் வண்டி தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூ ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ரயில் மட்டும் மாம்பலத்திலும் நின்று செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்படும் வாராந்திர சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் 18ம் தேதி முதல் அடுத்த மாதம் 25ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் கோயம்புத்தூரை காலை 6.50 மணிக்கு சென்று அடையும். மறுமார்க்கத்தில் 20ம்தேதி முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோயம்புத்தூரிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் சென்னை எழும்பூருக்கு காலை 8 மணிக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வண்டி பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோயம்புத்தூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ரயில் மட்டும் வடக்கு கோயம்புத்தூரிலும் நின்று செல்லும்.

சென்னை சென்டிரலில் இருந்து சோரனூர் வரை இயக்கப்படும் வாராந்திர சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் 21ம்தேதி முதல் அடுத்த மாதம் 28ம் தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் சோரனூரை காலை 8.55 மணிக்கு சென்று அடையும். மறுமார்க்கத்தில் 22ம் தேதி முதல் அடுத்த மாதம் 29ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சோரனூரிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் சென்னை சென்டிரலுக்கு காலை 7.45 மணிக்கு வந்து சேரும்.

இந்த இரு வண்டிகளும் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு மற்றும் ஒட்டப்பாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை சென்டிரலிருந்து சோரனூர் வரை செல்லும் வண்டி கோயம்புத்தூர் வடக்கிலும், சோரனூரிலிருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் வண்டி பெரம்பூரிலும் நின்று செல்லும்.

மேற்கண்ட ரயில்களுக்கு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.

ரயில்கள் நேர மாற்றம்:

சென்னை எழும்பூர்-கெளஹாத்தி இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 14ம் தேதி இரவு 10.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்வதற்கு பதிலாக இணை ரயில்கள் தாமதத்தால் 15ம் தேதி நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

அதைப்போன்று, சென்னை எழும்பூர்-திப்ருகர் இடையே செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் 17ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 18ம் தேதி நள்ளிரவு 12.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+