சிறுமிகளை கடத்த முயன்றவரை கைது செய்ய பொது மக்கள் சாலை மறியல்
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே சிறுவர், சிறுமியரை கடத்த முயன்றவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள எப்போதும்வென்றானைச் சேர்ந்த சோலையப்பன் குழந்தைகள் கவிதா, முத்து சிவபெருமான், செந்தில்குமார் மகள் காளீஸ்வரி, பெரியசாமி மகள் சீனியம்மாள் இவர்கள் 4 பேரும் எப்போதும்வென்றானில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை என்பதால் அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர்.
அப்போது பசுவந்தனை அருகேயுள்ள குதிரைகுளத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சிறுவர், சிறுமிகளுக்கு பணம் மற்றும் சாக்லெட் கொடுத்து கடத்த முயன்றார். இதை அங்கு நின்ற தோட்டக்காரர் லட்சுமணன் மற்றும் பொதுமக்கள் பார்த்து ராமசாமியை பிடித்து எப்போதும்வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஓட்டல் தொழிலாளி என்பதும், சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வரவே போலீசார் அவரை விடுவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செந்தூர் பாண்டியன் என்பவரது தலைமையில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ மோகனும் பொதுமக்களுக்கு ஆதரவாக மறியலில் கலந்து கொண்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி சுந்தர்ராஜ், தூத்துக்குடி ரூரல் எஸ்பி ஜெயக்குமார், ஓட்டப்பிடாரம் தாசில்தார் மணி ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ராமசாமியை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications