11.05 சதவீதமாகக் குறைந்தது உணவுப் பணவீக்கம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த வாரத்தைக் காட்டிலும் மேலும் குறைந்துள்ளது உணவுப் பணவீக்கம். கடந்த வாரம் 13.02 சதவீதமாக இருந்த இதன் குறியீட்டெண் 11.05 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பருப்பு, கோதுமை, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததன் காரணமாக, உணவுப் பணவீக்கம் சரிந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிததனர். அதேநேரம் காய்கறிகள், பால், பழங்களின் விலையில் உயர்வே காணப்பட்டது.
பிப்ரவரி 05ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் உணவுப் பணவீக்கம் 11.05 சதவீதமாக பதிவானது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 13.07 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் 2.02 சதவீதம் குறைந்துள்ளது நல்ல அறியாகக் கருதப்படுகிறது. மேலும் கடந்த 9 வாரங்களில் இல்லாத குறைவு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications