ஆயுதப் போலீசுடன் கடலுக்குச் செல்லுங்கள்! - பழ நெடுமாறன்
தஞ்சாவூர்: தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்லும் போது ஆயுதம் ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்கு உடன் அனுப்ப வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.
உலகத்தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் ராசாவுக்கு தொலைதொடர்பு துறை ஒதுக்க வேண்டி இருந்ததை பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார். 1983-ம் ஆண்டில் இருந்தே மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.
சிங்கள கடற்படையினரின் இடைவிடாத தாக்குதலுக்கு ஆளாகி இதுவரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள��ளனர். மத்திய- மாநில அரசுகளில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க. மீனவர்கள் பிரச்சினைக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்துவது கேலி கூத்தாக உள்ளது.
மத்தியிலே பதவி வகிக்கும் தி.மு.க. அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினையை எழுப்பி பாதுகாப்பு கொடுக்க அடியோடு தவறிய கடற்படைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து இருக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க கருணாநிதி தவறிவிட்டார். 1971-ல் கிழக்கு வங்க மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்ட போது மேற்கு வங்கத்தில் முதல்-அமைச்சராக இருந்த காங்கிரசை சேர்ந்த சித்தார்த்தசங்கரே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் ராணுவத்தை அனுப்பி கிழக்கு வங்க மக்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனவே முதல்வர் கருணாநிதி வெறும் நாடக போராட்டங்களை நடத்தாமல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது அவர்களுடன் ஆயுதம் ஏந்திய போலீஸ் படையை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்...", என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications