பிரேமானந்தா மரணம்

திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா மீது கொலை, கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 1995ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு உயர் சிகிச்சை பெறுவதற்காக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புடன் மஞ்சள் காமாலை நோயும் தாக்கியது.
இதையடுத்து அவர் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சுயநினைவை இழந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் சிகிச்சை பலனின்றி சுய நினைவு திரும்பாமலேயே இன்று பகல் 1.45 மணிக்கு அவர் இறந்தார்.
பிரேமானந்தா வாழ்க்கைக் குறிப்பு:
பிரேமானந்தா இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் பிரேம்குமார். 1951ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி இலங்கையின் மாத்தளையில் பிறந்தவர். 17 வயதிலேயே இவருக்கு ஞானம் வந்து விட்டதாக இவரது வாழ்க்கை வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தெரிந்த கடவுளை அனைவருக்கும் காட்டும் நோக்கிலேயே இவர் சாமியார் அவதாரம் எடுத்ததாகவும் அது கூறுகிறது.
மாத்தளையில் 1972ம் ஆண்டு ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார். அதில் ஆதரவற்றோர், கைவிடப்பட்ட குழந்தைகளைச் சேர்த்தார். இலங்கையில் இனக் கலவரம் பெரிதானபோது 1983ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். திருச்சி அருகே 1989ம் ஆண்டு புதிய ஆசிரமத்தை நிர்மானித்தார். அவரது ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைதகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட பிற உதவிகள் தரப்பட்டு வந்தன.
இந்த நிலையில், அவர் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி கைதானார். 1997ம் ஆண்டு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட மயில்வாகணம் பக்கிரிசாமி என்பவர் (இவர் பிரேமானந்தாவின் உறவினர்), ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2001ம் ஆண்டு மரணமடைந்தார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications