திண்டிவனம் முருகானந்தம் கொலை-சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு
சென்னை: கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திண்டிவனத்தில் பாமகவினர் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஓட்டுநராக இருந்த முருகானந்தம் வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐயிடம் விடக் கோரி அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குதான் அதிமுக, பாமக இடையிலான உறவு கசந்து போக முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக கூட்டணிக்கு பாமக போய் விட்ட நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், 2006ம் ஆண்டு முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார். பாமகவினர்தான் இந்தக் கொலையைச் செய்தனர்.
இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலரின் பெயர்களை சேர்க்காமல் காவல்துறை விட்டு விட்டது. இதுதொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ராமதாஸ் உள்ளிட்டோரின் பெயர்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டும் இதுவரை சேர்க்கப்படவில்லை.
எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால்தான் நியாயம் கிடைக்கும். நேர்மையான விசாரணை நடைபெறும். எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று கோர்ட் பரிசீலித்தது. அப்போது அரசுத் தரப்பில் 2 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கை பெஞ்ச் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications