ஜெ-வைகோ சந்திப்பு: பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு இடம்

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த நிலையில் 27 சீட்களை தர முடியும் என திமுக கூறிய நிலையில், திடீரென அதிமுக கூட்டணியில் வைகோ இணைந்தார்.
இதையடுத்து அவருக்கு 35 இடங்களை ஜெயலலிதா வழங்கினார். ஆனால், தேர்தலில் படுதோல்வி அடைந்த மதிமுக வெறும் 4 இடங்களில் தான் வென்றது.
இந் நிலையில் இந்தத் தேர்தலிலும் அதே 35 இடங்களை வைகோ கோருவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அதிமுக, மதிமுக தேர்தல் பணிக் குழுவினர் ஏற்கனவே சில முறை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
ஆனால், தேமுதிகவும் கூட்டணிக்குள் வரும் என எதிர்பார்க்கும் அதிமுக இம்முறை வைகோவுக்கு 20 இடங்களே தருவதாகக் கூறி வருகிறது. இந் நிலையில் ஜெயலலிதாவை வைகோ போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசினார்.
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்தேன்-வைகோ:
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வைகோ, புரட்சித் தலைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கவே வந்தேன். இந்த சந்திப்பின்போது, அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும் என்றார்.
பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு இடம்:
இந் நிலையில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு இன்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
சென்னையில் ஜெயலலிதா- பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் நடத்திய பேச்சில் இந்த உடன்பாடு ஏற்பட்டள்ளது.
அதிமுக கூட்டணியில் இதுவரை மனித நேய மக்கள் கட்சி 3, புதிய தமிழகம் 2, குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவற்றுக்கு தலா ஒரு சீட் என மொத்தம் 8 சீட்களுக்கான ஒதுக்கீடு நடந்து முடிந்துள்ளது.
சாமி தரிசனம் செய்ய ஜெயலலிதா நாளை மைசூர் பயணம்:
இதற்கிடையே ஜெயலலிதா தனது பிறந்த நாளையொட்டி நாளை காலை 10.30 மணியளவில் மைசூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு சாமுண்டீஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்புகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications