கனடாவில் கற்பழிப்பு வழக்கில் இந்திய டாக்டர் நண்பருடன் கைது
டொரன்டோ: கனடாவில் கற்பழிப்பு வழக்கில் இந்திய மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் உள்ள டொரன்டோ நகரைச் சேர்ந்தவர் அமிதாப் சவுகான் (32). மருத்துவர். இந்தியரான அவர் கனடா குடியுரிமை உள்ளவர்.
சம்பவம் நடந்த அன்று அவர் தனது நண்பர் சுகந்தன் கைலாச நாதன் (32) என்பவருடன் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு மது பாரில் 23 வயது பெண்ணை சந்தித்துள்ளனர். அவரிடம் நைசாகப் பேசியுள்ளனர். பின்னர் அவரை வேறொரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மூவரும் மது அருந்தியுள்ளனர். அந்த பெண்ணுக்கு கொடுத்த மதுவில் போதைப் பொருளை கலந்துள்ளனர்.
போதைப் பொருள் கலந்த மதுவைக் குடித்த பெண் மயங்கவே நண்பர்கள் அவரை கற்பழித்ததாகத் தெரிகிறது. இது குறி்தது டொரன்டோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது நீதமன்றத்தில் கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கைதான இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.












Click it and Unblock the Notifications