வல்வெட்டித்துறையில் பார்வதி அம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது
வல்வெட்டித்துறை மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
வல்வெட்டித்துரை அருகே உள்ள ஊரணி இடுகாட்டில் உடல் தகனம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
ஈழத்தில் நடந்து வந்த போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மாளும் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு தனிமைச் சிறையில் வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் ராணுவம் விடுவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மரணமடைந்தார் வேலுப்பிள்ளை. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவரது பிள்ளைகள் யாராலும் வர முடியாத அவலம் ஏற்பட்டது.
அதன் பின்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாளை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வி்மானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி தனது 'மனிதாபிமானத்தை' காட்டிக் கொண்டது மத்திய அரசு.
அதன் பிறகு ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு சிகிச்சைக்கு வரலாம் என்று மத்திய அரசும், அதை சுட்டிக் காட்டி தமிழக அரசும் பார்வதி அம்மாளுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் அவர் வர விரும்பவில்லை.
தொடர்ந்து வல்வெட்டித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அருகில் குடும்பத்தினர் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டதால் உறவினரான சிவாஜிலிங்கம்தான் உடன் இருந்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில், 20ம் தேதி அதிகாலையில் பார்வதி அம்மாள் மரணமடைந்தார். 81 வயதான அவரது உடல் தகனம் நேற்று நடந்தது. ஊரணி மயானத்தில் இந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். உறவினர் சங்கரநாராயணன் என்பவர் இறுதிச் சடங்குகளை செய்தார்.
இறுதி அஞ்சலி செலுத்த வந்த தமிழர்களைக் கூட ராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்தனர். அவர்களை வீடியோவில் படம் பிடித்தனர். இதைக் கண்டு தமிழர்கள் மனம் வெதும்பியபடி சென்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications