ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஜேபிசியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை

திமுக சார்பில் டி.ஆர்.பாலுவும், அதிமுக சார்பில் தம்பிதுரையும் குழுவில் இடம் பிடித்துள்ளனர்.
முதலில் 21 பேரைக் கொண்ட ஜேபிசியை அமைக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. ஆனால் அனைததுக் எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கியதாக ஜேபிசி இருக்க வேண்டும், எனவே 30 பேர் கொண்டதாக குழுவை அமைக்க வேண்டும் என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து 30 பேர் கொண்டதாக ஜேபிசியை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
அதில் இந்தக் கூட்டுக் குழுவில் 15 பேர் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்களாகவும், 15 பேர் எதிர்க் கட்சியினராகவும் இருப்பர் என்றும், மொத்த எம்பிக்களில் 20 பேர் லோக்சபாவையும் 10 பேர் ராஜ்யசபாவையும் சேர்ந்தவர்களாகவும் இருப்பர் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்தக் குழுவில் இடம் பெறும் எம்பிக்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.
அதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த கிஷோர் சந்திர தியோ, பபான் சிங், ஜே.பி.அகர்வால், ஜிதேந்திர ஹூடா, பி.சி. சாக்கோ, டி.ஆர்.பாலு, கல்யாண் முகர்ஜி உள்ளிட்டோரும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, ஹரின் பாதக், ஷரத் யாதவ், கோபிநாத் முண்டே, தாரா சிங் செளஹான், அகிலேஷ் யாதவ், குருதாஸ் தாஸ்குப்தா, அர்ஜூன் சரண் சேத்தி, தம்பிதுரை ஆகியோரும் அடக்கம்.
குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. இருப்பார். அனேகமாக இந்தப் பொறுப்பு கேரளாவைச் சேர்ந்த பி.சி.சாக்கோவுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக இதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்து பிரணாப் பேசுகையில், ஜேபிசி அமைக்காததற்கு அரசின் ஆணவம் காரணமல்ல. இந்த கூட்டத்தொடரை அமைதியாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற உள்ள இந்த ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விசாரிக்கும் ஜேபிசி குழு, தனது அறிக்கையை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குள் தாக்கல் செய்யும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications