ரயில்வே பட்ஜெட்-தமிழகத்திற்கு 2 துரந்தோ ரயில்கள் அறிமுகம்-திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பூஜ்யம்
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 2 துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சில புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அமல்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
மதுரைக்கு 2 துரந்தோ ரயில்கள்:
- சென்னை-மதுரைக்கு புதிய துரந்தோ எக்ஸ்பிரஸ் அறிமுகம்
- சென்னை-மதுரை-திருவனந்தபுரம் இடையே புதிய துரந்தோ எக்ஸ்பிரஸ்
இதன் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கும், மதுரை வழியாக சென்னைக்கும் என மதுரைக்கு 2 துரந்தோ ரயில்கள் கிடைத்துள்ளன. தற்போது ஏற்கனவே சென்னை கோவை இடையே ஒரு துரந்தோ ரயில் உள்ளது. அதேபோல பெங்களூருக்கும் ஒரு ரயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகக் குறைந்த புறநகர் ரயில்கள்:
கொல்கத்தாவுக்கு 50 புறநகர் ரயில்களை அறிவித்துள்ள மமதா பானர்ஜி, சென்னைக்கு மட்டும் வெறும் 9 புதிய புறநகர் ரயில்களை அறிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்து வருவதால் புறநகர் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வரும் நிலையில் வெறும் 9 ரயில்களை மட்டும் அவர் அறிவித்துள்ளது சென்னை மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய சேவைகள், சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு இயக்கப்படும்.
புதிய ரயில்கள்:
- கன்னியாகுமரி-திருவனந்தபுரம்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ்
- சென்னை-புதுச்சேரி-மதுரை-எர்ணாகுளம் புதிய ரயில்
- காரக்பூர்-வேலூர்-விழுப்புரம் ரயில்
- சென்னை-மைசூர் எக்ஸ்பிரஸ்
- தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயில்
- நர்சபூர்-நாகர்கோவில் ரயில்
- நாகர்கோவில்-கொல்லம் ரயில்
- தர்மபுரி-பங்காருப்பேட்டை-பெங்களூர் ரயில்
புதிய ரயில் பாதைகள்:
தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைப்பு தொடர்பான அறிவிப்புகளையும் மமதா வெளியிட்டார். அவை
- திருப்பதி -காஞ்சிபுரம் புதிய ரயில் பாதை
- மன்னார்குடி-புதுக்கோட்டைக்குப் புதிய ரயில் பாதை
- கூடுவாஞ்சேரி-ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் பாதை
நாகர்கோவில்-திருவனந்தபுரம் பாசஞ்சர் ரயில் கொச்சுவேலி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பெரம்பூர் ஐசிஎப் ஆலையில் 2 உற்பத்திப் பிரிவு விரைவில் தனது உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications