அரசுக்கு எதிரான விமர்சனம்: ஏர் இந்தியா சிஓஓ விலகல்

Subscribe to Oneindia Tamil

Air India
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஓஓ) கேப்டன் கஸ்தவ் பல்தாஃப் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

ஏர் இந்தியா விவகாரத்தில் அரசியல் குறுக்கீடு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பல்தாஃப். அவரது இந்த பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் இன்று கடிதம் அளித்துள்ளார் என ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தாஃப் இதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ், ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களில் பணியாற்றியவர்.

ஏர் இந்தியா நடவடிக்கைகளில் அரசின் தலையீடு அதிகமாக உள்ள நிலையில் பணியாற்றுவது சிரமமாக உள்ளது என அவர் தெரிவித்திருந்தார். மேலும் வெளியில் இருந்து ஒருவரை பணியாற்ற அழைக்கும்போது அவரை வேலைசெய்ய அனுமதிக்க வேண்டும். அரசு கட்டுப்படுத்தலாம். ஆனால் வேலைசெய்ய அனுமதிக்க வேண்டும். தினசரி நடவடிக்கைகளில் குறுக்கிடக்கூடாது என பல்தாஃப் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+