வீரமணி மூலம் திமுக விட்ட மறைமுக 'வார்னிங்' எதிரொலி-இறங்கி வருகிறது காங்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பெரும் இழுபறியாகியுள்ளது. கொடுக்கிற தொகுதிகளைப் பெறத் தயங்கும் காங்கிரஸ் ஏகப்பட்ட தொகுதிகளைக் கேட்டு வருகிறது. ஆனால் அந்த அளவுக்கு உங்களுக்குப் பலம் இல்லையே என்று திமுக கூறி வருகிறது. இதனால் இழுபறி நிலவுகிறது.
இந்த நிலையில் பாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், நேற்று விடுதலைச் சிறுத்தைகள் என மூன்று கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டது திமுக. இவர்களுக்கு மொத்தமாக 44 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தற்போது மிச்சம் 190 தொகுதிகள் மட்டுமே உள்ளன.
2 கட்டமாக காங்கிரஸுடன் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. மறுபக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக தொடர்ந்து ஒதுக்கி வருவதால் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை ஒதுக்கவே முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில்தான் நேற்று தி.க. தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலை மறைமுகமாக குறிப்பிட்ட அவர், இனியும் திமுக குட்டக் குட்டக் குனியக் கூடாது. சுயமரியாதையை காக்க துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இது தி.க. மூலம் திமுக விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், கருணாநிதியின் மனதில் ஓடுவதைத்தான் கி.வீரமணி தனது அறிக்கை மூலம் படம் பிடித்துக் காட்டியிருப்பதாகவும் கருதப்படுகிறது. அதிகபட்ச பொறுமையுடன் தற்போது கருணாநிதி இருப்பதையும், அதேசமயம், இப்படியே இருந்தால் அது கூட்டணிக்கு நல்லதாக அமையாது என்பதையும் வீரமணி அறிக்கை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது.
முதல்வர் கருணாநிதி ஒரு முடிவெடுக்கும் முன்பு அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து அறிக்கை அல்லது பேட்டி வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்போது வீரமணி மூலம் வந்துள்ள அறிக்கை, திமுக ஒரு முடிவெடுக்கத் தயாராகிறது என்பதை மறைமுகமாக கூறுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் தற்போது பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். இடையில் சிலர் அதிமுக பக்கம் போகலாமா என்று ஆலோசனை கேட்டுள்ளனராம். ஆனால் அதை உடனே மறுத்து விட்டது இன்னொரு குரூப். கருணாநிதியிடமாவது இந்த அளவுக்காவது பேச முடிகிறது. இப்போது ஜெயலலிதாவிடம் போனால், மகா கேவலமாக நடத்துவார் என்று கூறி விட்டார்களாம்.
இப்படி திக்கு திசை தெரியாமல் குழம்பி நிற்கும் காங்கிரஸ், ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து திமுக தரும் தொகுதிகளைப் பெறும் முடிவுக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதியுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு:
இந் நிலையில்
முதல்வர் கருணாநிதியை இன்று தலைமைச் செயலகத்தில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் சுந்தரம், ரங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருஞானசம்பந்தம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இரு தரப்பிலும் தெரிவித்தனர்.
-
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications