விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை விரைவுபடுத்தியுள்ளது திமுக. இதுவரை பாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியுடன் இழுபறியாக உள்ளது. இதுவரை எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டது திமுக. நேற்று இரவு திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் குழு, அறிவாலயம் வந்து இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. இதன் இறுதியில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள் தருவது என முடிவானது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியுடன் திருமாவளவன் குழுவினர் சந்திப்பை மேற்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருமா கட்சியையும் சேர்த்து தற்போது 44 தொகுதிகளைப் பங்கீடு செய்துள்ளது திமுக. இதில் பாமகவுக்கு 31, முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்னும் 190 சீட்களே கையில் உள்ளன. இதை திமுக, காங்கிரஸ், பிற தோழமைக் கட்சிகளுக்குப் பங்கீடு செய்ய வேண்டும். திமுக இந்த முறை குறைந்தது 130 சீட்களிலாவது போட்டியிட முடிவு செய்துள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 50 சீட்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதிப் பங்கீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில்,எங்களுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. ஆனால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம், தீவிரக் களப் பணியாற்றுவோம் என்றார்.
முன்னதாக அதிமுகவுடன் சேரப் போகிறார் திருமாவளவன் என்று செய்திகள் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
விருப்ப மனு தாக்கல் செய்யலாம்:
இந் நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விருப்ப விண்ணப்பபடிவம், கட்சி அலுவலகத்தில் கிடைக்கும் என்றும், அதனை பூர்த்தி செய்து வழங்குமாறு அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி செய்திக்குறிப்பில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு வருகிற 2011 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளை திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வழங்கி இருக்கிறது.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட கூட்டணியை விட மிகவும் வலிமைப்பெற்ற கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது. ஆக மேலும் பல்வேறு உற்சாகத்தை விடுதலைச்சிறுத்தைகளுக்கு தருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் தலைமை தேர்தல்க்குழு சிறப்பாக பல்வேறு குழுக்களை அமைத்து செயலாற்றி வருகிறது. அதில் தொகுதிக்குழு, பகுதிக்குழு வாக்குசாவடி குழு, விளம்பர குழு, நிர்வாக குழு என பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது.
2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விருப்ப விண்ணப்பபடிவம் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 5000 ரூபாய் பணமாகவோ, வரையோலையாகவோ வழங்கவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் தலைமைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி முதல் விண்ணபமாக பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த பெரம்பலூர் ஒன்றியச்செயலாளர் சீனிவாசன் விண்ணப்பத்தை கொடுத்தார். அதனை கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications