பாவூர்சத்திரத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு
Subscribe to Oneindia Tamil
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் காய்கறிகள் விலை திடீரென உயர்நதுள்ளது.
பாவூர்சத்திரம் தினசரி சந்தையில் நேற்று ரூ.10க்கு விற்பனையான ஒரு கிலோ வெண்டைக்காய் இன்று ரூ.14 ஆகவும், கேரட் ரூ.20லிருந்து ரூ.32 ஆகவும், பீன்ஸ் ரூ.24லிருந்து ரூ.34 ஆகவும், காலிபிளவர் ரூ.15லிருந்து ரூ.20 ஆகவும், மிளகாய் ரூ.12 லிருநது ரூ.14 ஆகவும், மல்லி இலை ரூ.5 லிருந்து ரூ.15 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
கத்திரிக்காய் ரூ.26லிருந்து ரூ.22 ஆக விலை குறைந்துள்ளது. மேலும் தக்காளி, மூட்டைகோஸ் ரூ.8, உருளைகிழக்கு ரூ.16, பீட்ரூட் ரூ.10, அவரை, பாகற்காய் ரூ.12, மாங்காய் ரூ.30, பூசணி ரூ.6, சுரைக்காய் ரூ.2, தேங்காய் ரூ.20 என அதே விலை நீடித்தது. கடந்த மாதம் கிலோ ரூ.50க்கு விற்ற ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 ஆகவும், பல்லாரி ரூ.12 ஆகவும் விலை குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications