புதுச்சேரி தொகுதிப் பங்கீடு: திமுக குழு நியமனம்

இந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நாஜிம், எஸ்.பி.சிவக்குமார் மற்றும் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
கமுக்கமாக இருந்த திமுக, காங்:
தமிழக சட்டசபைத் தேர்தலோடு புதுச்சேரிக்கும் நடந்தாலும் கூட திமுக நேற்று வரை தொகுதிப் பங்கீடு குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருந்தது. மறுபக்கம் அதிமுகவோ, அந்த மாநிலத்தில் கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியது.
தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரியிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால்
கூட்டணி குறித்து யாரும் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை என்று புதுச்சேரி காங்கிரஸார் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு அந்தக் கட்சியும் கண்டும் காணாமல் உள்ளது.
இந் நிலையில் புதுச்சேரிக்கு தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஆனால் இதுவரை அதுதொடர்பான எந்த அறிகுறியையும் காணவில்லை. அங்கும் வருகிற 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் தமிழகத்தை விட புதுவையில்தான் தலைவலி அதிகமாக உள்ளதாக கூறுகிறார்கள் காங்கிரஸார். கோஷ்டிப் பூசல் தவிர என்.ரங்கசாமியால் ஏற்பட்டுள்ள பாதிப்பும் காங்கிரஸைப் படுத்தி எடுக்கவுள்ளது. எனவே தமிழகத்திற்கு செல்லும் அதே கவனத்தை புதுச்சேரி விவகாரத்திலும் செலுத்த வேண்டும் என்று புதுவை காங்கிரஸார் கூறுகின்றனர்.
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 16, திமுக 11, பாமக 2 தொகுதிகளில் போட்டியிட்டன. இப்போது அங்கு காங்கிரஸும், பாமகவும் பிளவுபட்டுள்ளன. கடந்த தேர்தலில் கூட்டணியில் இடம் பெற்று ஒரு தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் இப்போது அதிமுக கூட்டணிக்கு வந்து விட்டது.
தற்போதைய நிலவரப்படி மீண்டும் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. காங்கிரஸ் தரும் தொகுதிகளை திமுக பெற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது. பாமகவுக்கு எத்தனை கிடைக்கும் என்பது தெரியவில்லை. விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு இடம் தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications